Friday, January 8, 2010

காதல்

குடையிருந்தும்
நனைகிறேன் மழையில்..
நனைக்க விரும்பவில்லை
அவள் கொடுத்த
குடையை...




அவள் விரல் பதிந்த
கடிதத்தை பூக்களால்
தூசு தட்டுகிறேன்...
விரல் பட்டால்
வலிக்குமே என்று...


குளிர்கின்ற தீயே...
உன்னோடும்
காதல் நோயா???




ஏலத்தில் பில் கேட்ஸ்
தோற்றுப்போனான்...
கோடிகளுக்கு பதிவான
அவள் உதடு பதிந்த
கைக்குட்டை...



ஆயிரம் கவிஞர்கள்
Eve Teasing செய்தாளும்
கோபப்படாதவள்
பெளர்ணமி...




பேரழகி அவள்
மட்டுமல்ல...
அவள்
நிழல்கூடத்தான்...




அவள்
கசக்கி எறிந்த காகிதம்..
என் நாட்டு
தேசியக்கொடி...



Lecturer திட்டிக்கூட
மாற்றவில்லை..
என் கையெழுத்தில்
அவள் பெயரை...



முதன்முதலாய்
மனிதன்..
எச்சிலுக்கு
மதிப்பளிக்கின்றான்...





அடடா அவள்
நூலிடை கண்டுதானோ..
நதிகள் நலிந்து
ஓடுகின்றன...














Wednesday, January 6, 2010

என் வாழ்க்கையும் நீங்களும்

இன்றுதான் பிறந்திருக்கிறேன்
உங்கள் கண்களோடு உறவாட...

என் எழுத்துலகம்
உங்களை உற்றுப் பார்க்கிறது...

என்னூள் எழும் எண்ணங்கள்
உங்கள் கண்களுக்காக இனி...

என் வாழ்க்கையும் நீங்களும்...